பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட் /பட்/ கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில், நவீன கற்பித்தலுக்கான திறன் பலகை (Smart Board) திறப்பு விழா நேற்று (23.06.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் திருமதி சிறிப் பிரியா வேழவேந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் கொள்வனவு செய்யப்பட்ட இந்த நவீன திறன் பலகையினை, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இவ்விழாவின் போது, அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 'A' தரச் சித்திகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், ஆரம்பப் பிரிவு வகுப்பறைகளை அழகாக வடிவமைக்கும் (கவின் நிலை) போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற ஆசிரியருக்கும் இதன்போது கௌரவிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், நன்கொடையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.