மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று(02.06.2026) மாலை பாலமுனைப் பகுதியிலுள்ள காணி ஒன்றில், வாழ்வாதாரத் தேவைக்காக மரம் வெட்டும் தொழிலில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதன்போது, எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி, நிலைதடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
மரத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் ஆரையம்பதி மற்றும் பாலமுனை பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.