தாதியின் மகனை துஸ்பிரயோகம் செய்த இளம் மருத்துவர்.!

ஹபரண கிராமிய வைத்தியசாலையில் வைத்தியர் விடுதியில் வைத்து 14 வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவரை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பொலிஸ் விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபரான வைத்தியர் 36 வயதுடைய அனுராதபுரம், சலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம்
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனின் தாய் இந்த வைத்தியசாலையிலேயே தாதியாக கடமையாற்றுகின்றார்.

கடந்த 18ஆம் திகதி இரவு நேரத்தில் இந்தச் சிறுவன் தனது தாயைச் சந்திப்பதற்காக வைத்தியசாலை வளாகத்திற்கு வந்திருந்தபோது வைத்தியர் சிறுவனை வைத்தியர் விடுதிக்குள் அழைத்துச் சென்று தவறான நடத்தைக்கு உள்ளாக்கியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.

தற்போது குறித்த சிறுவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சந்தேகநபரான வைத்தியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
புதியது பழையவை