அம்பாறை மாவட்டம்சம்மாந்துறையில் நேற்று (06.06.2026) மாலை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்த கோர விபத்தொன்றில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
நேற்று(06.07.2026) மாலை சம்மாந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ட்ரெக்டர் வாகனத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்த போதிலும், அதன் ஓட்டுநர் எவ்வித ஆபத்துமின்றி மிக அதிசயமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த விபத்தின் முழுமையான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
பார்ப்போரைக் கணநேரம் பதறவைக்கும் இந்த அதிர்ச்சி வீடியோ, தற்போது இணையத்தில் வெளியாகி பரவலான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
விழிப்புணர்வுக்கான எச்சரிக்கை.!
"அதிவேகமும் கவனக்குறைவும் ஒரு நொடியில் மனித உயிரைப் பறித்துவிடும்" என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. சாலை விதிகளை முறையாக மதித்து, கவனத்துடன் பாதுகாப்பாக வாகனம் செலுத்துமாறு சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.