தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள ஆறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும்(03.08.2026)ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆறு கட்சிகளின் பொது மேடையின் இணைப்பாளர், இச்சந்திப்பிற்கான கோரிக்கைக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்த ஜனாதிபதியின் செயலகம், ஆகஸ்ட் 3ஆம் திகதிக்கான சந்திப்பு நேரத்தை உறுதிசெய்து நேற்றைய தினம் பதில் அனுப்பியுள்ளது.
இந்தச் சந்திப்பில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தலா 3 பிரதிநிதிகள் வீதம் மொத்தம் 18 தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழ் பேசும் மக்களின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் அரசியல் சார்ந்த விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.