கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில், தன்னாமுனைப் பகுதியில் இன்று (26.07.2026)ஆம் திகதி அதிகாலை பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிகாலை 04.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாதையை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த கடைகளுடன் பலமாக மோதியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இவ்விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தின் போது பேருந்துக்கும், அருகிலிருந்த கடைகளுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் நிகழவில்லை. பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.