மட்டக்களப்பு கோட்டைகல்லாறு பாலத்தில் அதிகாலையில் உடற்பயிற்சி செய்த பெண்கள் - சமூக ஆர்வலர்களின் விசனம்!

​மட்டக்களப்பு, கோட்டைகல்லாறு பாலத்தில் இன்று (12.07.2026) ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 4:00 மணியளவில், 8 பெண்கள் ஒன்றிணைந்து வீதியில் உடற்பயிற்சியில் (Walking / Exercise) ஈடுபட்டுள்ளனர்.

​இவ்விடயம் தொடர்பாக உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும் விசனங்களும் எழுந்துள்ளன.

​மைதானங்கள் இருக்க வீதியைத் தேர்ந்தெடுப்பதா?

பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்கென பிரத்தியேக மைதானங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்கள் இருக்கும் போதோ அல்லது தத்தமது வீட்டு வளாகங்களிலேயே இவற்றைச் செய்யக்கூடிய சூழல் இருக்கும் போதோ, அதிகாலை வேளையில் பிரதான வீதியையும் பாலத்தையும் தேர்ந்தெடுத்தது தேவையற்ற ஒன்று என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
​சமூகச் சூழலும் பாதுகாப்பு அச்சமும்:
தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகள், கடத்தல்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து அனைவரும் நன்கு அறிந்ததே. 

இத்தகையதொரு இக்கட்டான, பாதுகாப்பற்ற சூழலில், போதிய வெளிச்சமில்லாத அதிகாலை 4:00 மணிக்கு பெண்கள் வீதிக்கு வந்து உடற்பயிற்சி செய்வது அவர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள்...

​"பெண்கள் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருதி, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 

அதிகாலை வேளையில் பொது வீதியில் இவ்வாறு நடப்பது தமிழ் கலாசார மற்றும் சமூக விழுமியங்களின்படி ஒரு சீர்கேடான முன்மாதிரியாகவே பார்க்கப்படும். 

எனவே, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி இவ்வாறான செயல்களைத் தவிர்ப்பதே சமூகத்திற்கு நல்லது" எனத் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை