தமிழ் மக்கள் வாழ்வில் என்றும் அழியாத வடுவாக காணப்படும் கறுப்பு யூலை கலவரம் இடம்பெற்று 43 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் தமிழர்கள் மீது தொடரும் அடக்கு முறைகளுக்கு எதிராக இலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக நேற்று (24.07.2026)ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
இலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக நேற்று (24.07.2026)ஆம் திகதி ஒன்று கூடிய புலம்பெயர் தமிழ் உறவுகளால் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1983-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் வன்முறைகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது
லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட
இப்போராட்டத்தை தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இணைந்து ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன
1983 ஜூலை 23 அன்று இலங்கையில் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரவும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.