மட்டக்களப்பில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09தினங்களில் 35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.உதயகுமார் தெரிவித்தார்.

அத்தோடு, இந்த வாரத்தில் டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக சுற்றாடலை வைத்திருந்த 35பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்து டெங்கு அச்சுறுத்தலாக சிவப்பு வலயமாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு தழுவிய ரீதியில் இன்று டெங்கு நோய் சடுதியாக அதிகரித்துச் செல்கின்ற காரணத்தினாலே, இன்றைக்கு நாட்டில் 15 பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகள் மிகவும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இங்கு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வாரம் மட்டும் எமது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தினால் பொலிஸாரின் உதவியுடன் 35-க்கும் மேற்பட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மேலும் வலுப்படுத்தப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.
புதியது பழையவை