பிறந்தநாளில் சாக்லேட் கொடுத்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி - அதிபர் மீது பெற்றோர் முறைப்பாடு.!

தனது பிறந்த நாளை முன்னிட்டு சக மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மாணவியொருவருக்கு பாடசாலை அதிபரால் மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபர் மீது விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பாடசாலை மாணவி தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு சக மாணவர்களுக்கு சாக்லேட் பகிர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது மாணவி வசமிருந்த 18 சாக்லேட்டுகளையும் பாடசாலை அதிபர் அச்சுறுத்தி உண்ண வைத்ததாக கூறப்படும் நிலையில், மாணவி, தற்போதைக்கு சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை