சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி இன்று காலை (13.07.2026) திருகோணமலை உட்துறைமுக மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்”, “அநுர ஆட்சியில் அநீதியா?”, "ஆட்சேர்ப்பில் முறைகேடு தொடர்பாடை குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரனை நடத்த வேண்டும்", "தகுதியான அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் சமமான மற்றும் நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் குறித்த சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அத்துடன், அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியானவர்களுக்கு நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதியது பழையவை