கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றையதினம் (13.07.2026) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.