விருது வழங்கும் விழா!

ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், சிறுமியர்களுக்கும் முன்னோக்கி வருவதற்கும், முன்னேற்றமடைவதற்கும் சம வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை பெண் சாரணர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழா (19.07.2026) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை விடவும் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளம் தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

#HariniAmarasuriya #PrimeMinister
புதியது பழையவை