வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமப் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு யாத்திரிகர் இன்று (12.07.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென மரணமடைந்துள்ளார்.
பாணமை பகுதியில் வைத்து இச்சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், காரைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த யாத்திரிகர் ஆவார்.
உயிரிழந்தவரின் பிரேதம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தைப் பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை, இம்முறை கதிர்காம பாதயாத்திரையின் போது நிகழும் இரண்டாவது மரணம் இதுவாகும்.
இதற்கு முன்னர் கடந்த 8ஆம் திகதி பொத்துவில், குண்டுமடு பகுதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த யாத்திரிகர் ஒருவர் முதன்முதலாக மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.