திருகோணமலையில் 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

மூதூர் - மஹாவலி கங்கை ஆற்றில் நேற்று முன்  (10.07.2026) குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மூதூர் -கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த  11 வயதுவர் என தெரியவருகிறது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் சமையலுக்கு சென்ற வேளை ஆற்றில் இறங்கிய போது நீரில் மூழ்கியுள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முயற்சித்தபோது பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை