இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு..!

இன்று(03.07.2026) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 300ஆவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ. 4,465 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 118 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 1,792 ஆக விற்பனையாகும்.

இந்நிலையில், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 55 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 835 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.
புதியது பழையவை