மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் வயல் நிலத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!

​மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, 
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு பகுதியில் 58 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா - நந்தகுமார் என்பவர் வயல் நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை நேற்று (01.07.2026) ஆம் திகதி மாலை தனது மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் சென்ற நபர், இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் தேடிச் சென்றபோது, இரவு 7 மணியளவில் வயல் காணிக்குள் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இன்று (02.07.2026) ஆம் திகதி காலை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டார்


உயிரிழந்த நபர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகம் இல்லாத காரனத்தினால்  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் குடும்பம் மிகவும் வறிய பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதாகும்.

இதனால், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின்  அனுமதியோடு பிரதேச சபையின் வாகன உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை போரதீவுப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சா.வரதராஜா ஆகியோர் நேரில் வருகை தந்து செய்து கொடுத்திருந்தனர்.
புதியது பழையவை