அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்று, சீருடை விவகாரத்தில் சுற்றுநிருபத்திற்கு முரணாக செயற்பட்டதாகக் கூறி சர்ச்சைக்குள்ளான 09 முஸ்லிம் பெண் சிற்றூழியர்களும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் பெற்ற அவர்கள் அனைவரும் இன்று (19/08/2026) ஆம் திகதி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கடமையேற்க வருகை தந்த அப்பெண் ஊழியர்களை, வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் அங்கிருந்தவர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
முன்னதாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய போது, நிர்ணயிக்கப்பட்ட சீருடைத் நெறிமுறைகளுக்கு மாறாக ஆடை அணிந்ததாகத் தெரிவித்து இவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படாமல் பல்வேறு விமர்சனங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.