போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் தலைப்பிலான விசேட மாநாடு நேற்று (02/08/2026) மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இம்மாநாட்டில், 2009 மே 18க்கு முந்தைய தமிழ் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் கொள்கை தவறாமலும், திசைமாறாமலும் தமிழ்த்தேசியப் பணிகளுக்காக உழைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட பற்றாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் போராளிப் படைப்பாளிகள் என 25 தேசப்பற்றாளர்களுக்கு "வரலாற்றின் வேர்கள்" எனும் மகுடம் சூட்டி கௌரவிப்பு அளிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் அரசியல் பிரதிநிதிகள், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வின் போது
மட்டக்களப்பு நகரபிதா சிவம் பாக்கியன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் (யாழ். மாவட்டம்), கவிந்திரன் கோடீஸ்வரன் (அம்பாறை மாவட்டம்), ஞானமுத்து ஸ்ரீநேசன் (மட்டக்களப்பு மாவட்டம்) மற்றும் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் த. சுரேஷ்
மேனாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்கண்டு நடராசா
மட்டக்களப்பு மேற்கு பிரதேச சபை தவிசாளர் த. கோபாலபிள்ளை
ஆன்மீகத் தலைவர்கள்.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவசிறி சச்சிதானந்தக் குருக்கள்
சிவஸ்ரீ வேலன் சுவாமி
மூத்த அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்
அருட்தந்தை லூத் அடிகளார் கலந்கொண்டனர்.
9 மாமனிதர்களுக்கு வீராஞ்சலி
மாநாட்டின் நிகழ்வு மேடை "தியாகச்சுடர் அன்னை பூபதி அரங்கம்" எனப் பெயரிடப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய விடுதலைக்காக உழைத்து, தமிழ் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட 9 முக்கிய ஆளுமைகளின் உருவப்படங்கள் விசேடமாக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜோசப் பரராஜசிங்கம் (மாமனிதர் / மேனாள் பா.உ)
சந்திரநேரு (மாமனிதர் / மேனாள் பா.உ)
'தராகி' சிவராம் (மூத்த ஊடகவியலாளர்)
ஐ. நடேசன் (நாட்டுப்பற்றாளர் / ஊடகவியலாளர்)
சந்திரா பெர்னாண்டோ (மனித உரிமைச் செயல்பாட்டாளர்)
அருட்தந்தை இயுனின் ஜே ஹபர் (சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்கத் துறவி)
அருட்தந்தை சவரிமுத்து செல்வராசா
தம்பையா (கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்)
மற்றும் படுகொலை செய்யப்பட்ட துறை சார்ந்த பற்றாளர்கள்.
இம்மாநாட்டில் மேனாள் போராளிகள், தமிழ்த்தேசியப் பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.