மட்டக்களப்பில் நாளை முதல் நாளாந்தம் 4 மணி நேர நீர்வெட்டு.!

​மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, பிரதான நீர்மூலமான உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. 

இதன் காரணமாக அப்பகுதிகளுக்குத் தொடர்ச்சியாகக் குடிநீர் வழங்குவது சாத்தியமற்றதாகக் காணப்படுவதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

​இதனையடுத்து, எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி சனிக்கிழமை (நாளை) முதல் நாளாந்தம் நீர்வெட்டை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

​அமுலாகும் திகதி:-  22.08.2026 (நாளை) முதல்
​நீர்வெட்டு 

நேரம்:-முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (நாளாந்தம்)

​நிலைமை சீரடைந்து வழமைக்குத் திரும்பும் வரை, நீர் நுகர்வோர்கள் நீரைச் சேமித்து வைத்து மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், இதனால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ். ஜயந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதியது பழையவை