இலங்கையில் கடும் வறட்சி - 7 மாவட்டங்களில் 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

​இலங்கையில் நிலவி வரும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.

​எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய 'எல் நினோ' (El Niño) காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ளவும், தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிசெய்யவும் பாதுகாப்பு அமைச்சு சிறப்பு சுற்றுநிரூபம் மற்றும் சட்டத் திருத்தங்களை வெளியிட்டுள்ளது.

​நீர் விநியோகம் அதிகரிப்பு:-

நபர் ஒருவருக்கான தினசரி நீர் விநியோகம் 6 லீட்டரிலிருந்து 15 லீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

​பவுசர்கள் மூலம் விநியோகம்:-

324 நீர் தாங்கி ஊர்திகள் (Water Bowsers) மூலமாகவும், தேவைப்படும் இடங்களில் இராணுவ பவுசர்கள் மூலமாகவும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

​தற்போதைய வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் எதிர்கால மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்வதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

​பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதியது பழையவை