தாழங்குடாவில் சக்தி வாய்ந்த 81 மி.மீ மோட்டார் குண்டு மீட்பு.!

​மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பகுதியில் சக்தி வாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று இன்று மதியம் (25.08.2026) ஆம் திகதி பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

​தாழங்குடா, வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்  முற்றத்தில், வீட்டு உரிமையாளர் பயிர்ச்செய்கைக்காக நிலத்தை தோண்டியபோதே இந்த 81 ரக மோட்டார் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

​இது குறித்து வீட்டு உரிமையாளர் உடனடியாக காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

​தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் நிறைந்திருந்த காலப்பகுதியில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை