மட்டக்களப்பில் சோகம் - கிரான்குளத்தைச் சேர்ந்த இளம் குடும்பப்பெண் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான திருமதி கஜேந்தினி சர்வேஸ்வரன் (வயது 41) அவர்கள், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முனௌ (11.08.2026)ஆம் திகதி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

​கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது.

​உயிரிழந்த திருமதி கஜேந்தினி அவர்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தவராவார். 

தனது கடமைகளைச் சிறப்பாகவும், சக உத்தியோகத்தர்களுடன் மிகுந்த புரிந்துணர்வுடனும் முன்னெடுத்து வந்த இவரது மறைவு, அப்பகுதி மக்களிடையேயும், சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை