மட்டக்களப்பு - வாகரைப் பகுதியில் இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த பேருந்து இந்த விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தின் போது பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், பெரும் அசம்பாவிதம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து சம்பவித்ததைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.