கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(14.08.2026)ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதியில் இருந்து குண்டு மீட்கப்பட்டு, செயலிழப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.