திருகோணமலை, நிலாவெளி, இக்பால் நரைச் சேர்ந்த இளம் யுவதிக்கு ( 31 வயது ) சென்ற 20 -05-2026 அன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.
சென்ற 06 - 08- 2026 அன்று வீட்டின் குப்பை கூழங்களை எரியூட்டுவதற்காக மண்ணெண்ணெய் கிடைக்காததால், இவரது திருமணத்திற்காக Paint பண்ணியபோது வீட்டில் எஞ்சியிருந்த Thinner ஐ எடுத்து குப்பைகளை எரியூட்டிய போது, திடீரென தீப்பரவல் அதிகரித்து இவரது ஆடையில் தீப்பிடித்ததால் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்து, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மறுநாள் அனுப்பி வைத்த போதும், சிகிச்சைகள் பலனின்றி 14-08-2026
அன்று மரணமடைந்துள்ளார்.