காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது யாழ்ப்பாணத்தில் பொலிஸார் பலப்பிரயோகம் ..!

​காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில், வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு இன்று (25.08.2026)யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

​இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் யாழ் மாவட்டச் செயலக சூழலில் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
​இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் மீது பொலிஸார் கொடூரமான முறையில் பலப்பிரயோகம் மேற்கொண்டு அவர்களை பலவந்தமாக வெளியேற்றினர்.

பொலிஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களின் ஆடைகள் கழன்ற நிலையிலும் அவர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்டமை அப்பகுதியில் பெரும்பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை