யாழ் நல்லூர் குறுக்குத் தெருச் சந்திப்பில் கொடூர விபத்து - இளைஞர் பரிதாபப் உயிரிழப்பு.!

யாழ்ப்பாணம், நல்லூர் குறுக்குத் தெருச் சந்திப்பில் நேற்று (23.08.2026) இரவு இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​நேற்று இரவு 11.20 மணியளவில் அதிவேகமாக வந்த காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தசாமி கோகுலதாஸ் என்பவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த சஞ்சீவன் என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோதிய வீரியத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்து உருக்குலைந்துள்ளன.

சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இருப்பினும், இத்தகவல் பொலிஸார் அல்லது மருத்துவ அறிக்கைகள் மூலம் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

​இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை