இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இந்த மாதத்தின் முதல் 06 நாட்கள் வரை மொத்தமாக 1,386,228 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

அத்துடன், அவர்களுள் இந்தியாவிலிருந்து 346,057 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை