வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரமொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமுனை கங்கை பகுதியில் மண்ணகழ்வு பணியில் ஈடுபட்டு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரமே நேற்று (10.08.2026) இரவு மர்ம நபர்களால் இவ்வாறு தீவைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த காலங்களிலும் இது போன்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.