உயிரிழந்த மலை சிறுத்தையின் சடலம் மீட்பு.!

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டத்தின் மேற்பகுதியில், சுமார் 4 வயது மதிக்கத்தக்க மலைச் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் நேற்று (12.08.2026) கண்டுபிடிக்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மலைச் சிறுத்தையின் கழுத்துப் பகுதியில் காயம் காணப்பட்டதாகவும், 2 மலைச் சிறுத்தைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மலைச் சிறுத்தையின் சடலம் இன்று (13.08.2026) ஹட்டன் நீதவான் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை