திருகோணமலை கடற்பரப்பில் நேற்று(15.08.2026)ஆம் திகதி இரவு முதல் ஆட்கள் எவருமின்றி படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருக்கின்றது.
40 குதிரைத்திறன் (40 HP) கொண்ட எஞ்சினுடன் கூடிய இப்படகில் மனிதர்கள் எவரும் தென்படவில்லை.
ஆபத்தில் சிக்கியவர்கள் அல்லது படகின் உரிமையாளர்கள் குறித்து அறிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.