மட்டக்களப்பு வவுனதீவில் உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் மோதி கொடூர விபத்து.!

மட்டக்களப்பு, வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவட்டுவான் – ஆயித்தியமலை பிரதான வீதியின் மாவடிச்சேனைப் பகுதியில் நேற்றிரவு (15.08.2026) ஆம் திகதி இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இவ்விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

​சம்பவ இடத்திலேயே நேர்ந்த கொடூரம்....

இளைஞர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மிக பலமாக மோதியுள்ளது.

இவ்விபத்தின்போது உழவு இயந்திரத்தில் சிக்கியதில் ஒரு இளைஞரின் ஒரு கால் சம்பவ இடத்திலேயே துண்டிக்கப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளது. 

அவருடன் பயணித்த மற்றைய இளைஞரின் காலும் பலத்த முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற உடனே 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​இச்சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை