மட்டக்களப்பு - கல்குடா, அனிலானா சுற்றுலாப் பகுதி கடற்கரையில் இன்று (17.08.2026)ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய சடலம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.