மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்கு கடை ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (18.08.2026) பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது, குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் கடுமையான சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இதனையடுத்து, களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த பலசரக்கு கடை உரிமையாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், இனங்காணப்பட்ட அனைத்து சுகாதார குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை கடையை பூட்டி சீல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.