2025 O/L பரீட்சை- மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் (O/L) பரீட்சையின் மீள் திருத்த முடிவுகளை இன்று (26.09.2026)ஆம் திகதி  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீவுசுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள்

மீள் திருத்த விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய அதிகாரப்பூர்வத் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளங்கள் மூலம் தங்கள் புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை இணையவழியில் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை உள்ளிட்டுத் தங்கள் மீள் திருத்த முடிவுகளைச் சரிபார்க்கலாம்.

மீள் திருத்த முடிவுகள் தொடர்பான மேலதிக விவரங்கள் அல்லது விளக்கங்களுக்கு, பரீட்சைகள் திணைக்களத்தின் பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

துரித எண்: 1911
தொலைபேசி எண்: 011 278 4208, 011 278 4537, 011 278 5922
தொலைநகல் : 011 278 4422
புதியது பழையவை