மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசசபையின் பழுகாமம் வட்டார உறுப்பினரான சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் அவர்கள், கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி (02.09.2026) திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இறைபதம் அடைந்தார்.
அவரது மறைவையொட்டி, போரதீவுப்பற்று பிரதேசசபையின் 16ஆவது சபை அமர்வு நடைபெற்ற நேற்று (25.09.2026)ஆம் திகதி பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பு நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வு, போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின்போது, அமரர் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தவிசாளரினால் அமரருக்கான நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.
இவ்வஞ்சலி நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் தங்கராசா கயசீலன், பிரதேசசபையின் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா, சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு மலர்தூவி தமது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்தினர்.