செனுலி வொனாரா கெவின் விக்கிரமசிங்க (Chenuli Vonara Kevin Wickramasinghe), மிஸ் குளோபல் 2026 (Miss Global 2026) சர்வதேச அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார்.
இலங்கையின் தேசிய கொடியை சர்வதேச மேடையில் ஏந்தி செல்லும் செனுலி, நாட்டின் கலை, கலாசாரம் மற்றும் இளம் தலைமுறையின் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்தவுள்ளார்.
23 மில்லியன் இலங்கையர்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் சுமந்து சர்வதேச போட்டியில் களமிறங்கும் செனுலிக்கு, இலங்கையர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.