யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் அத்துமீறி அகற்றிய சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பில் நாளை (28.09.2026) ஆம் திகதி திங்கட்கிழமை கண்டன கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போராட்டம், நாளை பிற்பகல் 2:30 மணிக்கு மட்டக்களப்பு தந்தை செல்வா சிலையடி பகுதியில் ஆரம்பமாகி, காந்தி பூங்கா வரை பேரணியாகச் செல்லவுள்ளது.
இப்பாதகச் செயலுக்கு எதிராகத் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வந்து தமது பலமான எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு அமைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.