சீரற்ற காலநிலை - 38 பாடசாலைகக்கு பூட்டு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களைச் சேர்ந்த மொத்தம் 38 பாடசாலைகள் இன்று (21.09.2026) மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலையும் இன்று இயங்காது.

சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண கல்வி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலவரம் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி அறிக்கையிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை