மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நேற்று (29.09.2026)ஆம் திகதி பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை மேம்பாடுகள், மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைச் சார்ந்த முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.