கொழும்பில் இலங்கை ஆண்களுடன் சிக்கிய வெளிநாட்டுப் பெண்கள்!

​கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையின் போது, இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​கிடைத்த தகவலின்படி, 2026 ஒக்டோபர் 12ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, ஒரு கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

​கைது செய்யப்பட்டவர்களில் இரு ஆண்கள் 23 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும், இரு பெண்கள் 43 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

​இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புதியது பழையவை