சவூதி அரேபியாவில் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து.! - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

​சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கான தண்டனையை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

இந்தத் தகவலை வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

​சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்தினால் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நேற்று (13.10.2026) ஆம் திகதி  முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

​இந்த வெற்றிகரமான முன்னெடுப்புக்காக ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். 

அத்துடன், இந்த முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சவூதிக்கான இலங்கைத் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை - சவூதி அரேபிய சட்டக் குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
புதியது பழையவை