மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் விமரிசையாக நடைபெற்ற வாணி விழா!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில், வருடாந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு வாணி விழா (சரஸ்வதி பூசை) நிகழ்வுகள் கலாசார பாரம்பரியங்களுடன் நேற்று (19.10.2026) அலுவலக வளாகத்தில் மிகச் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றன.

​மட்டக்களப்பு மாவட்டத்தின் பூர்வீக கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஆண்டுதோறும் இப்பகுதியில் ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
​
​முப்பெரும் தேவியர் வழிபாடு.

நவராத்திரியின் இறுதி நாட்களை முன்னிட்டு, கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளையும் போற்றி விசேட அபிஷேக மற்றும் ஆராதனைப் பூசைகள் நடத்தப்பட்டன.

​அலுவலகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், மாலை அணிவிக்கப்பட்டு பக்திபூர்வமாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

​ நவராத்திரி விரதத்தின் 9ஆவது நாளாகிய சரஸ்வதி விரதத்தினைத் தொடர்ந்து, இன்று (20.10.2026) ஆம் திகதி 10ஆவது நாள் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையுடன் நவராத்திரி விரதம் நிறைவுபெற்றது.

​
​இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி. மதிமேனன், உபதவிசாளர் த. கயசீலன், பிரதேசசபையின் செயலாளர் ச. விஜிதராஜா, பிரதேசசபை உறுப்பினர்கள்,அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பிரதேசசபையின் நலன்புரிச் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதியது பழையவை