மட்டக்களப்பு, பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் நவராத்திரி தின சரஸ்வதி பூஜை நிகழ்வு இன்று (20.10.2026) பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதன்போது, பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் சார்பில் ஆலயத் தலைவர் கலந்துகொண்டு, “சமயமும் சமூகமும் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ், சமயத்தின் ஊடாகக் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் நவராத்திரி தினப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் அவசியம் தொடர்பாகவும் அவர் உரையாற்றினார்.
கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான அடித்தளம் என்பதனை வலியுறுத்திய அவர், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், சிறந்த ஒழுக்க விழுமியங்களையும் கடைப்பிடித்து சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாகத் திகழ வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
மேலும், பாலீஸ்வரர் ஆலயம் தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தன்னாலான பங்களிப்பை வழங்கி, அவர்களின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமயப் பாரம்பரியத்தையும் கல்வி வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தையும் ஒழுக்க விழுமியங்களையும் மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.