திருகோணமலை மாவட்ட செயலக வாணி விழா!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வு (19.10.2026)ஆம் திகதி  மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்து சமய மரபுகள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இறை வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வின்போது கல்வி, கலை மற்றும் கலாசார வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

கலை, கலாசார நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் மாவட்ட மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவிகளின் பங்கேற்பையும் திறமைகளையும் பாராட்டும் வகையில் இடம்பெற்ற இச்செயற்பாடு, அவர்களை எதிர்காலத்திலும் இத்தகைய கலை, கலாசார நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி, மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை