மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.11.2026) ஆம் திகதி உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன்போது, களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த தனது இரண்டு பிள்ளைகளான அருந்தவகுமார் (மேயர்), சந்திரபவான் (மேயர்) ஆகியோரைத் தமிழ் மண்ணுக்காகத் தியாகம் செய்த தாயாரான அமரசிங்கம் சங்குபதி மாலை 6.5மணிக்கு மணி ஓசை ஒளிக்க முதலாவது ஈகைச் சுடரை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் நினைவிடத்தில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தி, அவர்களின் நினைவுகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டன.