யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.11.2026) மாலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது, மாலை 6.05 மணியளவில் மூன்று மாவீரர்களின் தாயார் பொதுச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் மாவீரர்களின் நினைவாக மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசார் சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாவீரர்களை நினைவுகூர்ந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.