யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறு, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
