ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 32வது வீரமக்கள் தின நிகழ்வு முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் இன்றைய தினம் கிரான்குளம் சீ மூன் ஹோட்டல் மண்டபத்தில் அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இவ் அனுஸ்டிப்பு நிகழ்வில் முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களான ந.ராகவன், கா.கமலநாதன், க.கிருபைராஜா, மாவட்ட குழு உறுப்பினர்களான ஞா.தவராஜா, ச.அருள்ராஜா உட்பட கழக உறுப்பினர்கள் மற்றும் இறந்த உறுப்பினர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



